தமிழ் பயிற்சி தேர்வு -6
- தேர்வு வினாத்தாள் ஒரு மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டிய 50 கேள்விகளை உள்ளடக்கியது.
- எல்லா கேள்விக்கான பதில்களும் சரியாக இருப்பின் ஐம்பது மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் எதிர்மறை மதிப்பெண் கிடையாது.
- ஒவ்வொரு வினாவிற்கும், தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக நான்கு விடைகள் கணிணி திரையில் தோன்றும்.
- நான்கு விடை வாய்ப்புகளும் சரியான பதிலாக தோன்றாத பட்சத்தில், "நான் இந்த வினாவிற்கு விடையளிக்க போவது இல்லை", என்ற ஐந்தாவது வாய்ப்பும் வழங்கப்படும். தேர்வு எழுதுபவர் 'Mouse' மூலம் சொடுக்கி தனக்கு சரியெனத் தோன்றும் விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பதில் பளிச்சிடப்பட்டு, தேர்வு எழுதுபவரால், தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பாக கருதப்படும்.
- தேர்வு எழுதுபவர் பதில் அளிக்க விரும்பாத பட்சத்தில், ஐந்தாவது வாய்ப்பான "நான் இந்த வினாவிற்கு விடையளிக்க போவது இல்லை" என்பதை தேர்வு செய்யலாம்.
- எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த பின், தாளை சமர்பிக்க வினாத்தாளின் முடிவில் உள்ள "DONE" என்கிற பொத்தானை சொடுக்க வேண்டும்..ஒருமுறை "DONE" பொத்தனை சொடுக்கி விட்டால், விடைகள் தன்னிச்சையாக கணிணியில் பதிவாகிவிடும்.
- தேர்வு எழுதுபவர், "DONE" பொத்தானை சொடுக்குவதற்கு முன்பாக தங்கள் விடைகளில் மாறுதல்களை செய்து கொள்ளலாம். "Scroll bar" - ஐ பயன்படுத்தி தேர்வு எழுதுபவர் தான் விரும்பும் வினாக்களுக்கு விடை அளிக்கலாம்.
- எல்லா வினாக்களுக்கும் பதில் அளித்து முடித்த பின், விடைகளை சரிபார்க்க "Go Back" பொத்தானை சொடுக்கவும்.
- ஒரு மணி நேரம் நிறைவுற்ற பின், தேர்வு எழுதுபவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ, விடைகளை சரி பார்க்கவோ இயலாது.
- தேர்வு எழுதுபவர் "DONE" பொத்தானை சொடுக்காவிடிலும் கூட, விடைகள் தன்னிச்சையாக கணிணியில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
- வினாத்தாளை சமர்பித்த பின், தேர்வு முடிவு/மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும். தேர்வு முடிந்த உடன், திரையிடப்பட்ட மதிப்பெண் பட்டியல்/தேர்வு முடிவு அச்சிடப்பட்டு, தேர்வுக்கு அனுப்பி வைத்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.எனினும், தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நிறுவனத்திடமிருந்து நேரடியாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
- தேர்வு எழுதுபவருக்கு, தேர்வாளரால் பின்புல சீட்டு (Back up sheet) வழங்கப்படும். மின் இழப்போ, கணிணியில் குறைபாடு அல்லது பிற இயந்திரக் கோளாறு ஏற்படும் சமயங்களில் இந்த சீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஏற்படும் நேர இழப்பை ஈடு செய்வது தேர்வாளரின் விருப்பத்திற்கு உட்பட்டது.
- தேர்வு வினாக்களுக்கு விடை அளிக்கும் முன்பாக, தேர்வு எழுதுபவருக்கு "மாதிரி வினாத்தாள்" பயிற்சிக்காக வழங்கப்படும்.
- தேர்வு எழுதுபவர் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தேர்வு தொடங்கும் முன்பாகவே தேர்வாளரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பின் எந்தவிதமான சந்தேகங்களும் ஊக்குவிக்கப்பட மாட்டாது.
- தேர்வாளர் கூறும் விதிமுறைகளை தேர்வு எழுதுபவர் கவனமாக பின்பற்ற வேண்டும்.
- தேர்வு எழுதுபவர், தேர்வு விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அவரது செய்கை, ஒழுங்கு மீறல்/முறையற்ற நடத்தையாக கருதப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும். தடை செய்யப்படும் காலம் நிறுவனத்தால் முடிவு செய்யப்படும்.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது தோழரே ! மிக்க நன்றி.
ReplyDeleteThis is not open currently
ReplyDeletehow should I open the website
any one place help me